thirumavalavan supports mersal

பல்வேறு பிரச்னைகளைக் கடந்து விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. மெர்சல் திரைப்படம் வெளியானபிறகும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மத்திய அரசின் திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இடம்பெற்றுள்ள காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் ஆகிய பாஜக தலைவர்கள், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மெர்சல் திரைப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

தணிக்கைக் குழுவின் தணிக்கையை பெற்று மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளது. அப்படத்தை தணிக்கை செய்த பின்னரே படத்தை வெளியிட்டிருப்பார்கள். அப்படியென்றால் தணிக்கைத்துறைக்கு எதிராக போராட வேண்டுமே தவிர மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக போராடக்கூடாது என திருமாவளவன் தெரிவித்தார்.