திமுகவுடன் எவ்வித பிணக்கும் இல்லை, சலசலப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்து எதார்த்தமானது என்றார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 3-ம் தேதி வைகோ அறிவித்துள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் யார் இருக்கின்றனர் என்ற பேச்சு பூதாகரமாக தற்போது எழுந்து வருகிறது. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து பேசியது யதார்த்தமானது என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். திமுகவில் எவ்வித சலசலப்பும் இல்லை. மேலும் தோழமை கட்சிகள் என்பதால் கூட்டணி உருவாகாது என்பது இல்லை, உறுதியாக கூட்டணி அமையும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது. திமுகவுடன் தோழமையுடன் தான் இருப்பதாக கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.