கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தனியாக பிரிந்து நின்ற கட்சிகள் இடையேபல மாறுதல்கள் வருகின்றது. மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக , தமாகா விலகியது. அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் ஊசலாட்டத்தில் இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமாகா திமுகவுடன் நெருங்க முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவெடுத்து திமுக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது..

இதில் பங்கேற்க மாட்டோம் என மக்கள் நலாக்கூட்டணியில் உள்ள மதிமுக , இடதுசாரி கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆனால் தடுமாற்றத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் மட்டும் இது பற்றி தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்பதாக கூறினார். 

இதனால் மக்கள் நலக்கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திருமாவளவ்ன் தலைமையில் இன்று விசிகே நிர்வாகிகள் கூட்டம் துவங்கி உள்ளது. இந்த கூட்ட முடிவில் திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் என தெரிகிறது.