Asianet News TamilAsianet News Tamil

ஆட்டத்தை ஆரம்பித்த திருமா... பக்காவா 12 கோரிக்கையை வைத்து அசத்தல் கடிதம்!! இது டெல்லி பரபர

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! எனவும், தலித் மற்றும் பழங்குடியினத்தவரின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! என்றும் நாடு முழுக்க குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்! நிதி அமைச்சரிடம்  திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Thirumavalavan Letter to Nirmala seetharaman
Author
Delhi, First Published Jul 3, 2019, 4:52 PM IST

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! எனவும், தலித் மற்றும் பழங்குடியினத்தவரின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! என்றும் நாடு முழுக்க குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்! நிதி அமைச்சரிடம் டாக்டர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில்; நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி தலைவர் தொல் திருமாவளவன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கீழ் கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு ஒன்றை அளித்தார்

அதில்; 1) கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதை சரி செய்ய ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியங்கள் தருவது உள்ளிட்ட பெரிய அளவிலான திட்டத்தை இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

2) விவசாயிகள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். விவசாய தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்.

3) வருமான வரி உச்ச வரம்பு 10 லட்சத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

4) குறிப்பிட்ட காலத்துக்குள் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் மிகப்பெரிய திட்டத்தை இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

5) இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிளாக்கிலும் தலித் சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று 2008ல் திரு பிரனாப் முகர்ஜி அவர்களின் தலைமையின் கீழான அமைச்சரவை குழு பரிந்துரைத்தது. அதன் பிறகு வந்த எந்த அரசும் அதை நிறைவேற்றவில்லை. நீங்கள் தாக்கல்செய்யவிருக்கும் முதல் நிதி நிலை அறிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

6) டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை. படிக்கும் தலித் மற்றும் பழங்குடியின மாணவருக்கு எண்ணிக்கையில் எவ்வளவு இருந்தாலும் அவர்களுக்கு எவ்வளவு உதவித்தொகை தேவையோ அதை உரிய நேரத்தில் வழங்குபடி அது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் 11,000 கோடி ரூபாய் பாக்கி இருந்தது. தலித் மற்றும் பழங்குடியின் மாணவருக்கு இந்த பாக்கித்தொகை விரும்பத்தகாத ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது. இந்த உதவித்தொகை கிடைக்காமல் பல மாணவர்கள் தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்கள். எனவே பொஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

7) 2018-19 நிதி நிலை அறிக்கையில், SCSP (தலித் மக்கள் துணை திட்டம்) மற்றும் TSP (பழங்குடியின மக்கள் துணை திட்டம்) திட்டங்களுக்கு முறையே 1,11,780.33 கோடி மற்றும் 48,108.4 கோடி ரூபாய் பற்றாகுறை இருந்தது. இந்த நிதி நிலை அறிக்கையில் தலித் மற்றும் பழங்குடி இனத்தவரின் மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைய உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

9) தமிழ்நாட்டின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை முடிக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

10) தமிழ்நாடு, தண்ணீர் பற்றாகுறை கொண்ட ஒரு மாநிலம். மேல் நீர் மற்றும் நிலத்தடி நீரின் வளங்கள் போதிய அளவில் இல்லாத மாநிலம். அதற்கான உடனடி தீர்வு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள். விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துகுடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

11) வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

12) இந்த தேசத்தின் நிலமற்ற விவசாயித் தொழிலாளர்களின் நலன் கருதிஅடிப்படை வருமான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios