3 தொகுதி இடைதேர்தலுக்கு செல்லும் தன்னை தாக்கலாம் என்பதாலும் , உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு துப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன்னை தஞ்சாவூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் என்னை தாக்க முயன்றனர்.
தற்போது சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் எனக்கு துப்பாகி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உத்தரவிட வேண்டும் என மனு கேட்டுக்கொண்டுள்ளார் . இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
