Asianet News TamilAsianet News Tamil

திருமா - ராஜபக்சேவுடன் கைகொடுக்காதிருந்தால்? 50 ஆயிரம் வீடு தமிழர்களுக்கு கிடைத்திருக்காது. செந்தில் தொண்டமான்

அந்த சந்திப்புக்குப் பிறகு  மூன்றே மாதத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பத்து எம்பிக்கள் அன்று வரவில்லை என்றால், திருமாவளவன் அன்று ராஜபக்சேவுக்கு கைகொடுக்காமல் பேயிருந்தால், இன்றைய இலங்கை தமிழர்களுக்கு வீடு கிடைத்திருக்காது.  ஆனால் அவர்களின் அந்த முயற்சியை இங்கு பலரும் விமர்சித்து வருகின்றனர். 

Thiruma - if you do not shake hands with Rajapaksa? Tamils would not have got 50 thousand houses. Senthil Thondaman.
Author
Chennai, First Published Mar 23, 2022, 11:24 AM IST

திருமாவளவன் ராஜபக்சேவுக்கு அன்று கைகொடுக்காமல் போயிருந்தால் ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கிடைத்திருக்காது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆனால் அதை வைத்து அரசியல் செய்து கொண்டுருப்பவர்களால் இலங்கையில் தமிழர்களுக்காக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முள்வேலி முகாம்களில் தமிழர்கள்:

இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர். அதை தடுக்க முன்வராதது சர்வதேச சமூகம் அன்று கைகட்டி வேடிக்கை பார்த்தது, இது இன்றளவும் தமிழர்களின் நெஞ்சில் ஆற்ற முடியாத ரணமாகவே உள்ளது. போர் நடந்து முடிந்த நிலையில் தமிழர்களின் நிலங்களை சிங்கள அரசு கைப்பற்றியதுடன் அவர்களை வதை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்தது. சர்வதேச சமூகம் தங்கள் நிலையை வந்து பார்க்கவேண்டும், முகாம்களில் வாடும் தங்களை மீட்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் கண்ணீர் கோரிக்கை வைத்தனர். தமிழர்களின் நிலை குறித்து ஆராய இந்தியாவிலிருந்து திமுக எம்பி டி.ஆர் பாலு தலைமையில் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் 11 பேர் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றனர். அந்த குழுவில் திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,  காங்கிரஸ் எம்.பி கே எஸ் அழகிரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Thiruma - if you do not shake hands with Rajapaksa? Tamils would not have got 50 thousand houses. Senthil Thondaman.பி

பிரபாகரனின் நண்பர் திருமாவளவன்:

அப்போது அதிபர் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்துப் பேசினர் டி ஆர் பாலு கனிமொழி திருமாவளவன் உள்ளிட்டோர் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தினார் தன்னை சந்திக்க வந்த முக்கிய எம்பிக்களில் திருமாவளவன் யார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும், ஏனென்றால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் போல, தமிழ்நாட்டில்  திருமாவளவன்  விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரிப்பவர் என்பதையும் ராஜபக்சே அறிந்திருந்தார். குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சனையில் தன்னை கொடிய அரக்கன் என்று வர்ணித்தவர் திருமாவளவன்தான் என்பது ராஜபக்சேவிற்கு நன்றாகவே தெரியும். அப்போது திருமாவளவனை சந்தித்த ராஜபக்சே இவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர், புலிகள் ஆதரவாளர் எனக்கு நன்றாக தெரியும்.  நல்ல நேரம் இவர்  கடைசிக்காலத்தில் பிரபாகரனுடன் இருந்திருந்தால் இவரும் மேலே போயிருப்பார் என கூறினார். அந்த அளவுக்கு திருமா மீது தனக்கிருந்த வெறுப்பை ராஜபக்சே அன்று வெளிப்படுத்தினார்.  

Thiruma - if you do not shake hands with Rajapaksa? Tamils would not have got 50 thousand houses. Senthil Thondaman.

ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்:

இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தமிழ் இனத்தை அழித்த  இனப்படுகொலையாளன்  ராஜபக்சேவை திருமாவளவன் சந்திக்கலாமா.? என பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் திருமாவளவனை இதை வைத்து தாக்கி பேசி வருகின்றனர். குறிப்பாக நாம்தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சியினர் திருமாவளவனை சமூகவலைதளத்தில் இதை வைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த சந்திப்பு குறித்து திருமாவளவனிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் சென்றேன், அன்று சபை நாகரீகம் கருதி மௌனமாக இருந்தேன்,  உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி வேறு எதுவும் செய்ய முடியவில்லை என கூறியிருந்தார். பலர் அவருடைய கருத்தை புரிந்து கொண்டாலும் ஒரு சில அரசியல் கட்சியினர் திருமாவளவனை விமர்சிப்பதற்கு இதை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உ.ப தலைவர் செந்தில் தொண்டைமான் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அன்று ராஜபக்சேவுக்கு கை கொடுக்காமல் இருந்திருந்தால் அன்று ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கிடைத்திருக்காது என கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:-  போர் முடிந்த பிறகு இலங்கை வந்திருந்த தமிழக எம்பிக்கள் குழு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தது, அப்போது திருமாவளவன் அவர்கள் ராஜபக்சேவுக்கு கை கொடுத்து விட்டார் என பலரும் இங்கு அவரை குறி வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அன்று திருமாவளவன் அவர்கள் ராஜபக்சேவுக்கு கை கொடுத்ததால்தான் அன்று தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடு கட்ட இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அன்று அவர் கை கொடுக்காமல் இருந்திருந்தால் 50,000 தமிழ் விதவைகள் இன்று வாழ்வதற்கான இடமில்லாமல் இருந்திருப்பார்கள். அந்த சந்திப்பின்போது நான் உடன் இருந்தேன்.

Thiruma - if you do not shake hands with Rajapaksa? Tamils would not have got 50 thousand houses. Senthil Thondaman.

ஈழத் தமிழர்க்கு மறு வாழ்வு:

டி.ஆர் பாலு அவர்கள் கனிமொழி அவர்கள், அவர்கள் திருமாவளவன் அவர்கள், கே.எஸ் அழகிரி ஆகியோர் அதில் இருந்தனர். அப்போது அவர்கள் இலங்கை தமிழர்களை சந்தித்து விட்டு அதிபர் ராஜபட்சவை சந்தித்தனர். போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு தயாராக இருந்தது, அதற்காக இந்திய அரசு 3 ஆண்டுகள் முயற்சி செய்தும் அதற்கு இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் தமிழக எம்பிக்கள் பத்து பேர் வந்து நட்பு ரீதியாக ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து போரால் பாதிக்கப்பட்ட பல விதவைப் பெண்கள் இடமின்றி கஷ்டத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசின் சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர நாங்கள் தயாராக இருக்கிறோம், கட்டுவதற்கு நீங்கள் எங்களுக்கு இடம் கொடுங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு ராஜபக்சே,  பத்து எம்பிக்கள் நட்பு பாராட்டி வந்திருக்கிறீர்கள். அதனால் வீடு கட்டுவதற்கு இடத்தை உடனடியாக தருகிறேன் என ஒப்புக்கொண்டார்.

Thiruma - if you do not shake hands with Rajapaksa? Tamils would not have got 50 thousand houses. Senthil Thondaman.

திருமாவளவனை கொச்சை படுத்துவதா..?

அந்த சந்திப்புக்குப் பிறகு  மூன்றே மாதத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பத்து எம்பிக்கள் அன்று வரவில்லை என்றால், திருமாவளவன் அன்று ராஜபக்சேவுக்கு கைகொடுக்காமல் பேயிருந்தால், இன்றைய இலங்கை தமிழர்களுக்கு வீடு கிடைத்திருக்காது.  ஆனால் அவர்களின் அந்த முயற்சியை இங்கு பலரும் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  அப்படி விமர்சித்து வருபவர்களால்  திருமாவளவன் சந்திப்பை கேவலப்படுத்துபவர்களால் இலங்கையில் தமிழர்களுக்காக ஒரு செங்கல் கூட வைத்துக் கொடுக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். செய்தில் தொண்டமானின் இந்த பேட்டி திருமாவளவனை விமர்சித்து வருபவர்களுக்கு  சவுக்கடியாக விழுந்துள்ளது என்றே கூறலாம்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios