பொதுவாகவே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுக்கு எதிரான மனநிலையில்தான் செயல்படுவார் என பரவலாக ஒரு பேச்சு உளளது. திமுக தலைமையைவிட தினகரனுடன் அவருக்கு நெருக்கம் அதிகம்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவிக்கு முன்பு வரை டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. இதையடுத்துதான் ராகுல் – கமல் சந்திப்புக்கு அவர் ஏறபாடு செய்தார்.

மேலும் தொடர்ந்து அமமுகவுன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், இது குறித்து நேரடியாகவே ராகுலுடன் பேசி இருக்கிறார். அப்போதே திருநாவுக்கரசு மீது கடுப்பான ராகுல் அவரை தூக்க திட்டமட்டார்.

ஆனால் அப்போது பொறுமை காத்த ராகுல் காந்தி, தற்போது திருநாவுக்கரசரை தூக்க வேண்டும் என்ற  திமுகவின் நெருக்கடிக்கு பணிந்துள்ளதாக கூறப்படுகிறது.  கருணாநிதி சிலை திறப்பு விழா முடிந்த கையோடு, திருநாவுக்கரசரை டெல்லிக்கு அழைத்த ராகுல் அவக்கு செம டோஸ் கொடுத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசர், ஸ்டாலினிடம் சரணடைந்துள்ளார். ஆனால் திமுக தலைமையோ அவரை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் ஓய்வு எடுப்பதாற்காக திருநாவுக்கரசர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். ஜனவரி மாத இறுதியில்தான் அவர் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே திருநாவுக்கரசர் தமிழகம் திரும்புவதற்குள் அவரது பதவி பறிக்கப்படும் என தெரிகிறது.