Asianet News TamilAsianet News Tamil

MGR-ஐ சொந்தம் கொண்டாட நீ யார் என்று கேட்கிறார்கள். அப்படி கேட்காதீர்கள்,பதில் கூறினால் தாங்கமாட்டீர்கள்- கமல்.

எம்.ஜி.ஆரை அதிகம் நேசித்த ஊர். எம்.ஜி.ஆரை பற்றி நான் பேசிய பிறகு யோசிக்க ஆரம்பித்துள்ளனர். எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாட நீ யார் என்று கேட்கிறார்கள்.நான் சொல்லுகிறேன் இங்கே உள்ள ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடுவார்கள். கேள்வி கேட்காதீர்கள். பதில் கூறினால் தாங்க மாட்டீர்கள். 

They ask who you are to celebrate owning MGR. Don't ask like that, you can't bear to answer- Kamal.
Author
Chennai, First Published Jan 12, 2021, 12:30 PM IST

சாதி பார்த்து ஓட்டு போடீதீர்கள். சாதிப்பவன் யார் என்று பார்த்து ஓட்டு போடுங்கள். நாளை நமதாகும். நீண்ட நாள் நீங்கள் காத்திருக்க வேண்டியது இல்லை என கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.  ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மையக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பேசியதாவது: எனக்கும் கோபிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 

They ask who you are to celebrate owning MGR. Don't ask like that, you can't bear to answer- Kamal.

என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் இணை இயக்குநர்கள் பலரும் கோபியை சேர்ந்தவர்கள். சரித்திரம் செல்லும் வகையில் வாழ்ந்த மனிதர்கள் இந்த கோபியில் வாழ்ந்துள்ளனர். மனித மலத்தை மனிதன் அள்ளுவதை எதிர்த்த லட்சுமணர் அய்யர் இந்த ஊரை சேர்ந்தவர்.எம்.ஜி.ஆரை அதிகம் நேசித்த ஊர். எம்.ஜி.ஆரை பற்றி நான் பேசிய பிறகு யோசிக்க ஆரம்பித்துள்ளனர். எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாட நீ யார் என்று கேட்கிறார்கள்.நான் சொல்லுகிறேன் இங்கே உள்ள ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடுவார்கள். கேள்வி கேட்காதீர்கள். பதில் கூறினால் தாங்க மாட்டீர்கள். உங்களுக்கும் வேலை இருக்கிறது. எங்களுக்கும் வெற்றி பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

They ask who you are to celebrate owning MGR. Don't ask like that, you can't bear to answer- Kamal.

கல்விக்காக 34 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. எந்த அரசு பள்ளியிலாவது அப்படி தெரிகிறதா? கொரோனா காலம் என்பதால் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தை தலை நிமிர வைக்க வேண்டும். ஆரோக்கியமாக அறிவுடன் உணர்வுடன் இருங்கள். சாதி பார்த்து ஓட்டு போடீதீர்கள். சாதிப்பவன் யார் என்று பார்த்து ஓட்டு போடுங்கள். நாளை நமதாகும். நீண்ட நாள் நீங்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. விரைவில் நாளை நமதாகும். உங்களை வைத்து வாழ்க்கையை நடத்துபவர்கள் அவர்கள் குடும்பங்களை எல்லாம் பார்த்துக்கொண்டார்கள். இன்னும் 7 தலைமுறைக்கு ஏற்பாடு செய்து கொண்டார்கள். 

They ask who you are to celebrate owning MGR. Don't ask like that, you can't bear to answer- Kamal.

நீங்கள் உங்கள் குடும்பங்களை பார்த்துக் கொள்ளுங்கள். யோசிக்க வேண்டிய நேரம் இது. யோசித்தே ஆக வேண்டும். நாளை நமது தலைமுறை நம்மை வசை பாட கூடாது. கோபிசெட்டிபாளையத்தில் ஒரு இரவு சிறிய கூட்டம் இந்த முடிவை எடுத்தது அதனால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று நாளை சரித்திரம் கூற வேண்டும். இங்குள்ள அனைவருக்கும் சரித்திரத்தில் இடம் கிடைக்க வேண்டும்.ஓட்டு உங்கள் உரிமை. அதை சரியாக பயன்படுத்துங்கள். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட் 9 மாதங்களாக மூடப்பட்டது. இதை நம்பி 900 குடும்பங்கள் உள்ளது. எதையெதையோ திறக்கறாங்க. என கடுமையாக அரசை விமர்சித்தார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios