Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை..!

தமிழகத்தில் வரும் 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்று தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

There will be no curfew in Tamil Nadu again... mk stalin Hope
Author
Chennai, First Published May 10, 2021, 3:41 PM IST

தமிழகத்தில் வரும் 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்று தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும் இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் தேநீர் கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்துக்கு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

There will be no curfew in Tamil Nadu again... mk stalin Hope

இந்நிலையில்,  தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், தேவை குறித்தும் கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். ஊரடங்கை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தகுதியான நிறுவனங்களை ஊக்குவித்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

There will be no curfew in Tamil Nadu again... mk stalin Hope

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 24-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் நிலை வராது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios