சசிகலாவிற்கு சிறையில் ......
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலா மற்றும் இளவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது கைதி எண் அறிவிக்கப்பட்டுள்ளது .
கைதி எண் ஒதுக்கப்பட்டது
மருத்துவ பரிசோதனைக்கு பின், சசிகலா விற்கு.10, 711 மற்றும் இளவரசிக்கு 10,712 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறையில் அடைப்பு :
தற்போது சசிகலா மட்டும் இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன ஆக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர் . இதனை தொடர்ந்து, சசிகலாவிற்கு சிறையில் எந்தெந்த சலுகை வழங்கப்படும் எனவும், எந்த சலுகை வழங்க பட மாட்டது எனவும் சித்திகள் வெளியாகி உள்ளது.
அதன்படி,
சசிகலா அடைக்கப்படவுள்ள சிறையில் 2 பெண் கைதிகள் இருப்பர் என்றும்,
3 புடவைகள் வழங்கப்படும்
சிறையில் ஒரு நாள் சசிகலா வேலை பார்த்தால் ₹50 ஊதியம்
ஞாயிறு கட்டாய வேலை பார்த்தாக வேண்டும் எனவும் சிறை நிர்வாக விதிகளில் உள்ளது
சசிகலாவிற்கு சிறையில் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதே வேளையில், விஐபி அந்தஸ்து இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் சசிகலா கோரிய சலுகை என்ன ?
1. சுடு தண்ணீர், மினரல் வாட்டர்
2. வீட்டு உணவு
3. தனிக்கட்டில், டிவி
4.வெஸ்டர்ன் டாய்லெட்
இவை அனைத்தும் கிடைப்பதற்கான சாத்திய கூறு இதுவரை எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
