பெண் அமைச்சர்களுக்கு திமுகவில் கொஞ்சம் கூட மரியாதை இல்லை.. திராவிட மாடலில் வெடி வைத்த கீதா ஜீவன்..
பெண் அமைச்சராக தான் செல்லும் இடங்களில் 4 ஆண் அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் என்னைவிட இளைஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கே முதலில் அழைத்து மரியாதை செய்யப்படுகிறது,
பெண் அமைச்சராக தான் செல்லும் இடங்களில் 4 ஆண் அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் என்னைவிட இளைஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கே முதலில் அழைத்து மரியாதை செய்யப்படுகிறது, இந்த சமூகப் பார்வையில் மாற்ற வேண்டுமென அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்ணுரிமை சமூகநீதி திராவிட மாடல் என பேசி வரும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முழு விவரம் பின்வருமாறு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெண்கள் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது, அதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார், அதைத் தொடர்ந்து அவர் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த தலைப்பு தற்போதைய சூழ்நிலையில் மிக மிக அவசியமான ஒன்று. இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கான தளம் விரிவடைந்து வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் பெண்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல்.. எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியா நடத்துங்க.. துரைமுருகன் வேண்டுகோள்.!
வரலாற்றில் நிலைநிற்கும் அளவிற்கு பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்து வருகிறது, எல்லா இடங்களிலும் ஆண்களுக்கு பெண் சமம் என்ற வகையில் அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வழியில் ஸ்டாலின் பெண்களின் வாழ்வு மேம்பட அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், எந்த இடத்திலும் பாலின வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக முனைப்பில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இதில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரே இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? போட்டு தாக்கும் தினகரன்.!
இது ஒருபுறம் இருக்கும் நிலையில் மறுபுறம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக நடந்து வருகிறது. எனவே பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக அதிகரித்துள்ளது, பெண் அமைச்சராக இருக்கும் நான் செல்லும் இடத்தில் கூட நான்கு ஆண் அமைச்சர்கள் இருந்தால் அதில் என்னைவிட இளைய அமைச்சர்களாக இருந்தாலும் முதலில் அவர்களை அழைத்தே மரியாதை செய்கிறார்கள். முதலில் இந்த சமூகப் பார்வையும் மாற வேண்டும். இந்த மாற்றம் என்பது முதலில் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும் என அவர் பேசினார்.
அமைச்சர் கீதா ஜீவனின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, பெண் விடுதலை, பாலியல் சமத்துவம் உள்ளிட்டவற்றை மேடைதோறும் முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை பேசிக்கொள்கிறார்கள் ஆனால் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் ஆண் அமைச்சர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனற மனக்குமுறல் எதார்த்தமாக வெளிபட்டுள்ளது, இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, கொள்கை கோட்பாடுகள் எல்லாம் வெறும் பேச்சுளவில்தான் போல செயல்பாட்டில் இல்லை என்பதைதேதானே அமைச்சரின் இந்த பேச்சு காட்டுகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.