Asianet News TamilAsianet News Tamil

பழைய வாகனங்களை விடுத்து புதிய வாகனம் வாங்கினால் ரிஜிஸ்ட்ரேசன் கட்டணம் கிடையாது... பிரதமர் மோடி அறிவிப்பு..!

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

There is no registration fee for buying new vehicles from old vehicles ... Prime Minister Modi's announcement
Author
Tamil Nadu, First Published Aug 13, 2021, 6:03 PM IST

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

குஜராத் தொழில்முதலீட்டாளர் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‘’நாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். தற்போதில் இருந்து அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில், நமது பணி, தினசரி வாழ்க்கை, தொழில் மற்றும் வணிகத்தில் மாற்றங்கள் ஏற்பட போகிறது.There is no registration fee for buying new vehicles from old vehicles ... Prime Minister Modi's announcement

நமது வாழ்க்கை முறை அல்லது பொருளாதாரம் ஆகட்டும்,தொழில்நுட்பமானது மாறி வருகிறது. இந்த இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த சவால்களுக்கு மத்தியில், நமது சுற்றுச்சூழல், நிலம், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை அடிபபடையில் நாம் பணியாற்றலாம். ஆனால், பூமியில் இருந்து கிடைக்கும் இயற்கை வளங்களின் அளவு நமது கைகளில் இல்லை. சுற்றுச்சூழல் உகந்து வளர்ச்சி இருக்க வேண்டும். பருவநிலை மாற்ற சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். மக்களின் நலன்கருதி, இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுக்கும்.  அப்போது தேசிய வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்த பிரதமர், இந்தக் கொள்கை வாகனத்துறைக்கும், புதிய இந்தியாவின் போக்குவரத்துக்கும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கப்போகிறது என்றார்.There is no registration fee for buying new vehicles from old vehicles ... Prime Minister Modi's announcement

இந்தக்கொள்கையின் ஒவ்வொரு வழியிலும் பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படுவது முதலாவது பயனாகும். இந்தச் சான்றிதழை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்துடன், சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இரண்டாவது பயன், பராமரிப்பு செலவு, பழுதுபார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை இதன் மூலம் மிச்சமாகும். மூன்றாவது பயன் ஆயுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. பழைய வாகனங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பெருத்த அபாயத்திலிருந்து விடுதலை. நான்காவதாக, நமது பூமியை மாசுபடுத்துவது குறையும்' என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios