Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கும் சசிகலா தரப்புக்கும் இடையே ஒரு பிரச்சனையும் இல்லை. ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி.


தொடர்ந்து ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார், எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் அரைகுறையாக தெர்ந்து கொண்டு  பேசி வருகிறார். இது போன்று பேசுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.  

There is no problem between us and the Sasikala side. Ministerial Action for Stalin's Criticism.
Author
Chennai, First Published Jan 22, 2021, 11:40 AM IST

மதுரை மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கீழமாத்தூர் ஊராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி, நிழற்குடை, சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியை கலைப்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருந்தார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் போடியில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். 2016 தேர்தல் அறிக்கையில் சிறு குறு பயிர்கடன் தள்ளுபடி செய்வேன் என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அது எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது. அதேபோல் 31 மார்ச் 2016ல் 5372 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதை ஒப்பிட்டு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். 

There is no problem between us and the Sasikala side. Ministerial Action for Stalin's Criticism.

தொடர்ந்து ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார், எதையும் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் அரைகுறையாக தெர்ந்து கொண்டு  பேசி வருகிறார். இது போன்று பேச்வதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்வர் பேசியது தன்னை காப்பாற்றி கொள்ளவதற்காக என்று கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்கட்சி தலைவர் மேடையில் பேசி வருவதற்கு எல்லாம் முடிச்சுபோட முடியுமா? டெல்லியில் போய் பேசி முடிவு எடுப்பதற்கு, சண்டையிடு வதற்கு எங்களுக்கும் இன்னொரு (சசிகலா) தரப்புக்கும் என்ன தகராறு உள்ளது. War  நடைபெறுகிறது.  இதில் என்ன பொருத்தம் உள்ளது. ஸ்டாலின் எங்களை பற்றியும் முதல் வரை பற்றி பேசி வருவது தவறு. டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது துறை ரீதியான சந்திப்பாக தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 

There is no problem between us and the Sasikala side. Ministerial Action for Stalin's Criticism.

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து டெல்லியில் திமுகவினர் குரல் கொடுத்தனரா? திமுகவினர் தான் பதவிக்காக அடிக்கடி டெல்லி சென்று பிரதமரை சந்திப்பார்கள் நமது முதல்வர் அப்படியல்ல. துறை ரீதியான விசயத்திற்கு மட்டுமே செல்வர் என்றார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம். தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டீல் மருத்துவ மாணவ, மாணவியரை உருவாக்கி முன்னோடி திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம். கடந்த 10 ஆண்டுகளாக நான் சட்டமன்ற உறுப்பினராக கடமையை செய்துள்ளேன் அதனால் தான் இன்று இங்கு மக்களை சந்திக்க முடிகிறது. இல்லை என்றால் மக்களை சந்திக்க முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜீ பேசினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios