இந்த உலகம் தன்னைப் போன்றது என பிரதமர் மோடி நம்புகிறார். அனைவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் அல்லது மிரட்டிவிடலாம் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி..

" கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டின்  பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு சரிந்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் நடந்தது. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் எப்போது நுழைந்தது கல்வான் பள்ளதாக்கில் நடந்தது என்ன என்பது குறித்து காங்கிரஸ் துருவி துருவி பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்டு வருகின்றது. மோடி அரசு  பல்வேறு விவகாரங்களில் முறையாக திட்டமிடல் இல்லை என, மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தன்னுடைய கருத்தை அதிரடியாக தெரிவித்து வருகிறார். மேலும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில்...."இந்த உலகம் தன்னைப் போன்றது என பிரதமர் மோடி நம்புகிறார். அனைவரையும் விலைக்கு வாங்கிவிடலாம் அல்லது மிரட்டிவிடலாம் என்று நினைக்கிறார்.ஆனால், உண்மைக்காக போராடுபவர்களை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது, அவர்களை எதற்கும் பணிய வைக்க முடியாது என்பதை அவர்  புரிந்துக் கொள்ள மாட்டார்".