there is no power cut in tamilnadu says edappadi palanisamy

தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மூன்று நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறப்பட்டு சென்றார்.

இன்று சேலத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.மின்பொருட்கள் பளுதால்தான் மின்தடை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் எனது தலைமையிலான அரசு விரைவாக செயலபடுகிறது எனவும் கோப்புகள் எதுவும் கையெழுத்து போடாமல் நிலுவையில் இல்லை. நாங்கள் மக்கள் பிரச்சனைக்காக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம் என்று காட்டமாக தெரிவித்தார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற தமிழக அரசின் அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,

“விவசாயிகள் மரணம் பற்றி ஆட்சியர்கள் ஆராய்ந்து அறிக்கை தந்துள்ளனர். ஆட்சியர்களின் அறிக்கையின் படியே தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள வழங்கப்பட்டு வருகின்றன. என்று தெரிவித்தார்.

மேலும் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. மூடப்பட்ட மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.