Asianet News TamilAsianet News Tamil

ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்ல.. பங்கம் செய்த குஷ்பு..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் பாஜகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 
 

There is no point in spying on Rahul Gandhi's cell phone .. Khushboo who kidding ..!
Author
Chennai, First Published Jul 20, 2021, 9:34 PM IST

 நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் குஷ்பு புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். “எனது ட்விட்டர் கணக்கிலிருந்து எனக்கு தெரியாமலேயே சில ட்வீட்கள்  நேற்று செய்யப்பட்டிருந்தன. இன்று எனது கணக்கின் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. அதன்பிறகு என்னுடைய எல்லா ட்விட்டர் தகவல்களும் அழிக்கப்பட்டன. என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட பிறகு இப்போது மீண்டும் காட்டுகிறது. ஆனால், என்னால் அந்தக் கணக்கை பயன்படுத்த முடியவில்லை.There is no point in spying on Rahul Gandhi's cell phone .. Khushboo who kidding ..!
இதுதொடர்பாக நான் ட்விட்டரில் புகார் செய்தேன். அதற்கு என்னுடைய பாஸ்வேர்டு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், அது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் டிஜிபியிடம் புகார் அளித்தே. அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பாஜகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆளுநர் பதவிக்கு வரும் அளவிற்கெல்லாம் எனக்கு இன்னும் வயதாகவில்லை” என குஷ்பு தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios