Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை தடுக்க வேற வழியே இல்ல.. சென்னையில் ரங்கநாதன் தெரு, உள்ளிட்ட 9 இடங்களுக்கு தடை..

கொண்டு வருவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில்  பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களான ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், தங்கசாலை, ராயபுரம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் இன்று காலை 6 மணி முதல் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை செயலபட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 

There is no other way to stop the corona .. 9 places including Ranganathan Street in Chennai are banned ..
Author
Chennai, First Published Jul 31, 2021, 9:57 AM IST

சென்னையில் இன்று முதல் 9 தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூட கூடிய மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை கடந்த வாரம் வரை குறைந்து வந்த நிலையுல், கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பல மாவட்டங்களில் கணிசமான உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரினா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200யை தாண்டியது.

அதேபோல கோவையில் 230 பேர், ஈரோட்டில் 171 பேர் என 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், தமிழக அரசு இன்று முதல் 9 ஆம் தேதி வரை ஒரு வாரகாலத்திற்கு  ஊரடங்கு நீட்டிப்பு செய்திருக்கும் நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி சார்பாக கொரொனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில்  பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களான ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், தங்கசாலை, ராயபுரம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் இன்று காலை 6 மணி முதல் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை செயலபட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில் இன்று காலை முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகளை திறக்க வரும் உரிமையாளர்களை கடைகளைத் திறக்கக் கூடாது என்று காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். குறிப்பாக ரங்கநாதன் தெருவைப் பொருத்தவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரக்கூடிய சூழலில் பொதுமக்கள் கூட ரங்கநாதன் தெருவிற்கு வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios