Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ரத்து பண்ணுங்க... டாக்டர் ராமதாஸ் அதிரடி கோரிக்கை.!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

There is no other way than this... Cancel the Plus Two exam in Tamil Nadu... Dr. Ramadoss Action Request.!
Author
Chennai, First Published Apr 15, 2021, 8:40 PM IST

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்கனவே 10ஆம் வகுப்பு தேர்வை தமிழக அரசு ரத்து செய்து அறிவித்துவிட்டது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. There is no other way than this... Cancel the Plus Two exam in Tamil Nadu... Dr. Ramadoss Action Request.!
ஆனால், கொரோனா வைரஸ் இந்தியாவில் எக்குத்தப்பாக எ கிறிகொண்டிருக்கும் நிலையில், பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும்!There is no other way than this... Cancel the Plus Two exam in Tamil Nadu... Dr. Ramadoss Action Request.!
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாமகதான் குரல் கொடுத்தது. அந்த வகையில், மத்திய அரசின் நடவடிக்கை பாமகவுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் சிபிஎஸ்இ போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios