கொரோனா அதிகரித்தாலும் பயப்படாதீங்க.. EVKS.இளங்கோவன் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சு சொன்ன பரபரப்பு தகவல்.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்ததினார்.
வெளிநாட்டில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்வு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்ததினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று 76ஆக உயர்ந்துள்ளது. உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது.
புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. உருமாற்றம் பெற்ற கொரோனாவால் உயிரிழப்போ, பெரிய அளவில் பாதிப்போ ஏற்படவில்லை. தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும் பதற்றம் தேவையில்லை.
கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் தயார் நிலையில் தான் உள்ளது. H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். H3N2 வைரஸ் பாதிப்பை கண்டறிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பதற்றமடைய வேண்டாம். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நலமாக உள்ளார் என்றார்.