தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் எனத் தகவல் வெளியாகி வந்தது. ஓவைசி கட்சி சீமானுடன் கூட்டணி அமைக்கும் என்று தகவல் வெளியானது. திமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டால் ஓவைசி கட்சி நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்கும் என்று  தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் நாம்  தமிழர் கட்சி தமிழகத்தில் தனித்துதான் போட்டியிடும் என்று அக்கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி ஒவைசி கட்சியுடன் மட்டுமல்ல எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்காது. எனக்கு ஒவைசி மீது தனிப்பட்ட முறையில் மதிப்பு உண்டு. அவ்வளவுதான் சொல்ல முடியும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையே இறுதி செய்து விட்டது” என்று தெரிவித்தார்.