அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா மறைவிற்கு பின் அவரின் எண்ணம் கழகம் 1000 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது தான் என கூறிய அவர், 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பாடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் சசிகலாவையும், அமமுகவையும் அதிமுகவில் இணைக்க 100%  வாய்ப்பில்லை என உறுதிப்பட அவர் தெரிவித்தார் 

சசிகலாவையும், அமமுகவைவும் அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் நாடுமுழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவிமரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது. அதனை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலை எனவும், தொடர்ச்சியாக இதுத்தொடர்பாக ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். மேலும், அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா மறைவிற்கு பின் அவரின் எண்ணம் கழகம் 1000 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது தான் என கூறிய அவர், 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பாடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் சசிகலாவையும், அமமுகவையும் அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை என உறுதிப்பட அவர் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் மகன் சசிகலாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மனிதாபிமான அடிப்படையில் தான் அவர் கருத்து கூறி உள்ளதாகவும், அரசியலுக்கு வராமல் அறவழியில் செல்ல வேண்டும் என்றும் தான் அவர் கூறியுள்ளார், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி தான் தேர்தலில் அமையும் என்றும், தேர்தல் தேதி அறிவிக்கும்போது இதுத்தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும், ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை வேறு, கூட்டணி வேறு என கூறிய அவர், அவர்கள் கருத்துக்கள் கூறுவதற்கு உரிமை உள்ளதாகவும், கூட்டணி பலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பா.ம.க தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளதாக கூறிய அவர், கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.