அடக்கி ஆண்ட கூட்டம். அடங்கிப்போக மாட்டோம் என்கிற சொல்லிற்கேற்ப இன்று மீண்டும் கொதியிலுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விட்டு விளாசி அரை சதம் கடந்து ஆஸ்திரேலியா பக்கம் மேட்சை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அதுமட்டுமல்ல, இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக ஆடியுள்ளார் அவர். அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள் எடுத்தார். டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம், 289 ரன்களை டேவிட் வார்னர் எடுத்துள்ளார்.

Scroll to load tweet…

இந்த நிலையில்தான், பிளேயர் ஆப் தி டோர்னமன்ட் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, ஜெய்பீம் பட சர்ச்சை வன்னியர்களை ஆத்திரப்படுத்தி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், வார்னர் -வன்னியர் எனக் கூறி கவனத்தை திருப்பியுள்ளனர். 

Scroll to load tweet…

மஞ்சள் சட்டை என்பவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’அடக்கி ஆண்ட கூட்டம். அடங்கிப்போக மாட்டோம் என்கிற சொல்லிற்கேற்ப இன்று மீண்டும் கொதியிலுள்ளது ஆஸ்திரேலிய அணி. அதுபோல நாளை நாமும் கொதித்தெழுந்தால் நாமும் வெல்ல முடியும். வார்னர்- வன்னியர் எனப்பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

Scroll to load tweet…

Scroll to load tweet…
Scroll to load tweet…