Asianet News TamilAsianet News Tamil

Chennai Election Results 2022 : கொல்லப்பட்ட திமுக நிர்வாகியின் மனைவி வெற்றி...

Chennai Election Results 2022 : சென்னையில் கொல்லப்பட்ட திமுக நிர்வாகியின் மனைவி சமீனா சென்னை மடிப்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்..

The wife of the slain DMK executive has won the Chennai fold..
Author
Chennai, First Published Feb 22, 2022, 12:22 PM IST

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட திமுக வட்ட செயலாளர்  செல்வத்தின் மனைவி சமீனா 188 வது வார்டில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வாக்காளரை 2,975 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்..

வழக்கம் போல சென்னை திமுகவின் கோட்டை என்பதை ஸ்டாலின் நிரூபித்துக் காட்டியுள்ளார். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தம் 200 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளது..

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகளில் 150 வார்டுகளுக்குமேல் கைப்பற்றுவோம் என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி  மொத்தம் 200 வார்டுகளில் இதுவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 50 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios