Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் விவசாயிகள் தொழிலாளர்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு... கருத்து கணிப்பு முடிவுகள்..!

சட்டமன்ற தேர்தலில் பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 

The votes of women farmers and workers go to the AIADMK
Author
Tamil Nadu, First Published Mar 30, 2021, 1:28 PM IST

சட்டமன்ற தேர்தலில் பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 

அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெண்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்ற கருத்து கணிப்பை நடத்தினர். தொகுதிகளின் அடிப்படையில் அல்லாமல் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் பூர்வமாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளின் ஆதரவு அதிமுக கூட்டணிக்கு என்று 52% பேர் தெரிவித்துள்ளன்ர், இதே போல் பெண்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு என்று 51% பேரும்  தொழிலாளர்கள் வாக்கு அதிமுக கூட்டணிக்கு என்று 36% பேர் தெரிவித்துள்ளனர். 

கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாக 34% பேரும் வீழ்ச்சியடைந்துள்ளதாக 30% பேரும் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு மிகச்சிறப்பு என்று 28% பேரும் சிறப்பு என்று 39% பேரும் தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே முதலமைச்சருக்கு பெருகி வரும் ஆதரவை காட்டுவதாக அமைந்துள்ளது. கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு, கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பு, குடிமராமத்து ஆகியவை மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக 54% பேர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு  செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதோடு, அதனால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளது. இத்திட்டங்கள் அதிமுகவிற்கு தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்று தரும் என்று தெரியவந்துள்ளது. 

அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை என்று 41% பேரும் அலை உள்ளதாக 22% பேரும் தெரிவித்துள்ளனர். இது அதிமுக அரசின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கு கிடைத்த வரவேற்பாகவே கருதப்படுகிறது. பெண்களின் வாக்குகளை கவர்ந்த தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று 40% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்த தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று 27% பேரும் தலித் மக்களை கவர்ந்த தலைவராக முதலமைச்சர் இருப்பதாக 32% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று 32% பேரும் மு.க. ஸ்டாலின் என்று 30% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திய திட்டங்களின் அடிப்படையில் தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர் தெரியவந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios