நாமக்கல் மாவட்டம். ராசிபுரத்தை சேர்ந்த வி.பி.துரைசாமி திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜக எல்.முருகனை சந்தித்து பேசினார். இது குறித்த புகைப்படங்களுடம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 
 இவர் 1989 முதல் 1991 வரை மற்றும் 2006 முதல் 2011 வரை தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் பல சட்டமன்றக் குழுக்களுக்கான உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1995 - 2001 ஆண்டுகளில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
 
திமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள வி.பி.துரைசாமி தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்தது திமுகவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கடந்த ஒருவருடகாலமாக எந்த முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படாமல் டம்மியாக இருக்கிறார் துரைச்சாமி.

 பாஜக தலைவர் முருகன் பொறுப்பேற்றதில் இருந்து அவரை சந்தி வாழ்த்து சொல்ல வில்லை அதற்காக நேரில் சென்று வாழ்த்து சொன்னேன் என்று தனது கட்சிக்காரர்களிடம் பதில் சொல்லி வருகிறாராம் துரைச்சாமி. ராஜசபா எம்பி சீட் தனக்கு வழங்காமல் புதிதாக ஒருவருக்கு வழங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது என்றும் புலம்பியிருக்கிறார் துரைச்சாமி.
திமுக தலைவர் ஸ்டாலின் துரைச்சாமியை கட்சியில் இருந்து ஓரம் கட்டும் விதமாக நடந்துகொண்டதால் தான் இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கிறாராம். திமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசும் போது... துரைச்சாமி கட்சியை விட்டு சென்றால் திமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை.அவரால் அவர் இருக்கும் பகுதியிலோ மாவட்டத்திலோ கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. கலைஞர் அவருக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். அந்த நன்றி கூட இல்லாமல் பாஜக பக்கம் சாய்கிறார் என்கிறார்கள். கூடியவிரைவில் திமுகவில் இருந்து நீக்கப்படுவார் என்று அறிவாலயம் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து கொண்டு இருக்கிறது.