'நான் ரெடி, நீங்க ரெடியா' - மது குடித்துவிட்டு "குத்தாட்டம்" போட்ட 'திமுக' பிரமுகர் - வைரல் வீடியோ !
திமுக பிரமுகர் ஒருவர் மது குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது நண்பர்களுக்குள் நடனப் போட்டி அரங்கேறி இருக்கிறது. இந்த போட்டியில் அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக நடனமாடி இருக்கின்றனர். திமுக ஒன்றிய கவுன்சிலரின் நேரம் வந்தபோது அவருக்கு 'நான் ரெடி, நீங்க ரெடியா? ' பாடல்போடப்பட்டது.
இந்த பாடலுக்கு செம உற்சாகமாக நடனமாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரில் இருந்து வெளியே வரும் திமுக ஒன்றிய கவுன்சிலர் 'நான் ரெடி, நீங்க ரெடியா? ' செம ஸ்டெப் போடுகிறார். அவரது காரில் திமுக கொடி பறக்கிறது. இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள இணைய வாசிகள் அவர் குடிபோதையில் தான் ஆடுகிறார் என்று தெரிவித்து இருகின்றனர்.
https://twitter.com/Vijayc06351265/status/1462996633470181385
ஒருபக்கம் மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு மக்கள் இன்னும் மீள முடியாத சூழலில், திமுக நபர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.