Asianet News TamilAsianet News Tamil

வாடகைக்கு போன வீட்டில் வகையா மாட்டிய பொள்ளாச்சி ஜெயராமன்.. சமையல் அறையையும் விடாத லஞ்ச ஒழிப்பு போலீஸ்.

இந்த வீட்டின் உரிமையாளர் சிவக்குமாராக இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நான்தான் குடியிருப்பதாக தெரிவித்தேன். என்னை பார்த்த பிறகாவது சென்று இருக்கலாம். உள்நோக்கத்தோடு சோதனை. அதிமுக தொண்டர்களிடமும், மக்களிடத்திலும் பீதியை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

The tragedy of Pollachi Jayaraman who went for rent .. Anti-corruption police did not even leave the kitchen.
Author
Chennai, First Published Jan 20, 2022, 6:32 PM IST

மிரட்டல் பாணியிலேயே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது என்றும் இன்று காலை தங்கள் வீட்டுக்குள் திமுதிமுவென நுழைந்த போலீசார் எந்த பதிலும் சொல்லாமல்  வீட்டு சமையலறையிலும் சோதனை நடத்தினர் என்று முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனின் உறவினர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வந்த  நிலையில்  தற்போது அந்த சோதனை நிறைவடைந்துள்ளது. 6 மணி நேரம் நடந்த சோதனை முடிந்துள்ளது.

இந்நிலையில் அந்த வீட்டில் வசித்து வரும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "துணை சபாநாயகராக நான் இருந்த போது வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு நுங்கம்பாக்கம் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வருகிறேன். இன்று காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். சோதனை நடத்த வேண்டும் என கூறியபோது ஏன் எதற்காக என கேட்டேன். அதற்கு அவர்கள் சரியான விளக்கத்தை தரவில்லை. 

The tragedy of Pollachi Jayaraman who went for rent .. Anti-corruption police did not even leave the kitchen.

ஆனால் சோதனைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தேன், என்னுடைய வீட்டிலே எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை, 3 அறைகளிலும் சோதனை நடத்தினர். சமையல் அறையிலும் சோதனை நடத்தினர்,  எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். எந்த ஆவணங்களும், பணம், பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மிரட்டி பார்ப்பதற்கான சோதனையே இது, அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளராக இருக்கிறேன். நேற்று தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று அதிமுகவின் கருத்துக்களை பதிவு செய்தேன், அதன் பிறகே இந்த சோதனை நடந்துள்ளது. மற்ற கட்சியினர் இந்த சோதனை எப்படி நினைப்பார்கள்? எப்படி தேர்தல் பணியாற்றுவார்கள்? என்பதனை எண்ணி பார்க்க வேண்டும். ஜனநாயகத்தில் மிரட்டும் வகையிலான குறுக்கு வழியே இது. 

The tragedy of Pollachi Jayaraman who went for rent .. Anti-corruption police did not even leave the kitchen.

இந்த வீட்டின் உரிமையாளர் சிவக்குமாராக இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நான்தான் குடியிருப்பதாக தெரிவித்தேன். என்னை பார்த்த பிறகாவது சென்று இருக்கலாம். உள்நோக்கத்தோடு சோதனை. அதிமுக தொண்டர்களிடமும், மக்களிடத்திலும் பீதியை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையின் போது என்ன நடந்தது என்பதனை தெரிவிக்க முடியாது. என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலை தெரிவித்து விட்டேன். நான் யாரிடமும் பேச லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுமதிக்க வில்லை, செல்போனை வாங்கி வைத்து விட்டனர். இந்த வீட்டில் என்னுடைய பொருட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த சோதனையை தவிர்த்து இருக்க வேண்டும். மிரட்டலுக்குகான பாணியே இது. சோதனை செய்வதற்காக ஆணையில் சிவக்குமார் பெயர் இருக்கிறது" என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios