முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்தவரை எங்கள் நிலைப்பாடு மாறாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்தவரை எங்களது நிலைப்பாடு மாறாது. அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்து விட்டோம். யாராக இருந்தாலும் அதிமுக தலைமையின் கீழ் தான் வந்தாக வேண்டும். நாங்கள் அப்படி செல்லமாட்டோம், கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு, தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படுகிறது என்று கூறினார். 

மேலும், கூட்டணி விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் அறிவிப்பையே அதிகாரப்பூர்வமாக இருக்கும். திமுகவிற்கு ஆட்சி எட்டாத கனி, அதை மு.க.அழகிரி தெளிவுபடுத்தியள்ளார். ஸ்டாலினால் ஆயுள் முழுவதும் போஸ்டர் மட்டுமே அடிக்க முடியுமே தவிர முதல்வராக முடியாது. திமுக இரண்டாக பிளவுபடும் தருணம் வந்துவிட்டது. 

போஸ்டர்களில் திமுக முன்னணி தலைவர்கள் படம் போடக்கூடாது. ஆனால், உதயநிதி படம் மட்டும் போடலாம். இது என்ன நியாயம் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.