Asianet News TamilAsianet News Tamil

மூன்றாவது அலையில் நாள் ஒன்றுக்கு 42,000 பேர் பாதிக்கப்படுவர்.. எச்சரித்த ஐஐடி.. சுற்றிச் சுழலும் மா.சு..

தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசி உள்ளதாக கூறினார். மேலும் உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். 

The third wave will affect 42,000 people a day. IIT Warning .. Health Minister work for  prevention.
Author
Chennai, First Published Aug 3, 2021, 3:29 PM IST

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் மத்தியில் உச்சம் அடைய வாய்ப்பு உள்ளதாக  ஐஐடி தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில்  மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

உலக தாய்பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய் பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய் பால் வங்கியை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் இந்த ஆண்டு முடிவதற்கு முன்பாக 7 மருத்துவ கல்லூரி மற்றும் 5 மாவட்ட மருத்துவமனை என 12 இடங்களில் தாய் பால் வங்கி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 

The third wave will affect 42,000 people a day. IIT Warning .. Health Minister work for  prevention.

மேலும் செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தில் கொரனோ மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்பிருப்பதாகவும் 42,000 வரை தினசரி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐஐடி கணிப்பு  தெரிவித்த நிலையில் ஐஐடி ,எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் கேட்கபட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அண்டை மாநிலங்கள் கேரளா,கர்நாடகா,ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 The third wave will affect 42,000 people a day. IIT Warning .. Health Minister work for  prevention.

தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசி உள்ளதாக கூறினார். மேலும் உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த அவர், இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பாலும் 10 பேர் டெல்டா + வகை பாதிப்பாலும்  பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரனோ மூன்றாவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளும் தயால் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios