Asianet News TamilAsianet News Tamil

தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். தேமுதிக விஜயகாந்த் ஆவேசம்.!

உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும். அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம் என்ற தேமுதிக-வின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.
 

The Thai instructional program should be extended to the 8th grade. Temutika Vijayakand is obsessed!
Author
Tamil Nadu, First Published Jul 31, 2020, 8:58 PM IST

உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும். அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம் என்ற தேமுதிக-வின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

The Thai instructional program should be extended to the 8th grade. Temutika Vijayakand is obsessed!
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன். இந்த வரையறையை 8-ம் வகுப்பு வரை நீ்ட்டிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பி.எட். கல்வி, வெளிப்படையான ஆசிரியர்கள் நியமனம் போன்ற அறிவிப்புகளுக்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும். அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம் என்ற தேமுதிக-வின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios