இடைத்தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது.

 

அதிமுக கூட்டணியில் புதியநீதி கட்சி சார்பாக வேலூர் தொகுதியில் களமிறங்கினார் ஏ.சி.சண்முகம். இந்நிலையில், அவரை எதிர்த்து  திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டிலும் அவர்களது நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக 11 கோடிக்கு மேல் பணங்கள் சிக்கியது.

இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணியம் ரத்து செய்தது. இந்த ரத்தை எதிர்த்து ஏ.சி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து ‘தமிழகத்தில் மே 19ம் தேதியன்று 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போதாவது வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நடத்த வேண்டும். திமுக செய்த தவறால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி டவுன் 200வது வாக்கு சாவடியில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வாக்களித்தார். தனது வாக்கை பதிவு செய்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலை ரத்து செய்ததது சரிதான் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை.இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகின்றன'' என்று சொல்லும் போது கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.