Asianet News TamilAsianet News Tamil

அடிக்கடி சிக்கலை ஏற்படுத்தும் சின்னம்... எடப்பாடியின் முட்டுக்கட்டைக்கு முடிவுகட்ட கிளம்பிய டி.டி.வி..!

இது தொடர்பாக அவர் கூறுகையில், செப்டம்பர் 30-ம் தேதியன்று ஒரு அரசாணை போட்டிருக்கிறார்கள். நமது இயக்கம் பதிவு பெறப்போகிறது என்பதை தெரிந்துகொண்டு புதிதாக பதிவு பெற்ற கட்சிகளுக்கு தனியாக சின்னம் கொடுக்கக்கூடாது என்றும், சுயேச்சைகளுக்கு வழங்கப்படுகிற சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என கூறியிருக்கிறார்கள். 

The symbol that causes the problem...ttv dinakaran
Author
Tamil Nadu, First Published Dec 12, 2019, 3:09 PM IST

உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சைகளுக்கு வழங்கப்படுகிற சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தில் போட்டியிட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழா நேற்று மாலை விழுப்புரத்தில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.  

The symbol that causes the problem...ttv dinakaran

பின்னர், விழாவில் பேசிய டி.டி.வி.தினகரன், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களால், ஜெயலலிதாவின் உருவத்தை கொடியிலே தாங்கியிருக்கிற அமமுக கடந்த 15.3.2018 அன்று தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் ஒருவழியாக துரோகிகளின் பல்வேறு இடையூறுகளை தாண்டி இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் பதிவு பெற்ற ஒரு அரசியல் இயக்கமாக செயல்பட அனுமதி தந்திருப்பது மகிழ்ச்சி அளக்கிறது. துரோகிகளை எதிர்த்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதாவினால் 30 ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்றைக்கு துரோகிகளின் கையில் மாட்டிக்கொண்டு கம்பீரத்தை இழந்து நிற்கிறது. 

The symbol that causes the problem...ttv dinakaran

அதிமுகவை மீட்டு உருவாக்கப்பட்ட இழக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றார். இன்றைக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நமது இயக்கம் பதிவு பெற்ற அரசியல் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நமக்கு ஒரு சின்னம் கொடுப்பார்களா? என்று தேர்தல் ஆணையத்தை அணுகினோம். ஆனால், தனி சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்துவிட்டனர். 

மேலும், இது தொடர்பாக கூறுகையில், செப்டம்பர் 30-ம் தேதியன்று ஒரு அரசாணை போட்டிருக்கிறார்கள். நமது இயக்கம் பதிவு பெறப்போகிறது என்பதை தெரிந்துகொண்டு புதிதாக பதிவு பெற்ற கட்சிகளுக்கு தனியாக சின்னம் கொடுக்கக்கூடாது என்றும், சுயேச்சைகளுக்கு வழங்கப்படுகிற சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என கூறியிருக்கிறார்கள். 

The symbol that causes the problem...ttv dinakaran

இந்த கெடுபிடியாளர்கள் எத்தனை தடைகளை போட்டாலும் அதை முறியடித்து நாம் வெற்றி பெறுவோம். இப்போதைக்கு சிறப்பான சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடுவோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட நல்ல வாய்ப்பாக இந்த உள்ளாட்சி தேர்தலை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விழா நிகழ்ச்சியில் விழுப்பும் வடக்கு மாவட்ட செயலாளர் கௌதம் சாகர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios