The stunning range of shoes on ponradha
மத்திய நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்டதால அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
டெல்லி ஜெஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு மத்தய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.
சேலம் அரிசிபாளையத்தில் உள்ள மறைந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு மத்திய அமைச்ச்ர் பொன்.ராதாகிருஷ்ணன் மறறும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் ஆவேசமாக ஓடிவந்தார்.
கோஷமிட்டபடியேஓடிவந்த அவர், பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பை எடுத்து வீசினார். இதனால், கடும் அதிச்சயிடைந்த உடன் வந்த அதிகாரிகள் மற்றும போலீசார், அந்த இளைஞரை அப்புறப்படுத்தினர்.
அந்த இளைஞரும் தொடர்ந்து பொன்.ராதாவுக்கும், பாஜகவுக்கும் எதிராக கோஷமிட்டார். அப்போது, பொன்.ராதாவுக்கு எதிப்பு தெரிவிக்க கூடாது என அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களத்தில் குதித்தனர்.
அதை பற்றி கவலைப்படாமல் பொன்.ராதாகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மீண்டும் வெளியே வந்து பத்திரிகையாளர்களுடன் பேசியபோதும், பொன்.ராதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஜாதி துவேஷத்தால்தான் மாணவர் முத்துகிருஷ்ணன் மரணமடைந்தார். மத்திய அரசு, இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என கூறி, அங்கிருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

