Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் உள்ள கோயில்களில் சிலைகளை எடுத்துவிட்டு சிலுவைகள் வைக்கப்படும்... அதிர வைக்கும் மோகன் சி. லாசரஸ்.!

சிலுவையை வைத்து சர்ச்சாக மாற்றி ஆராதனை நடக்கிறது. ஒரு அடையாளம் தோன்ற ஆரம்பித்து விட்டது. இனி இந்தியா முழுவதும் அந்த மாதிரி காரியங்கள் நடக்கப்போகிறது

The statues are taken from temples in India and crosses ... Lazarus
Author
Tamil Nadu, First Published Feb 25, 2020, 3:24 PM IST

மோகன் சி.லாசரஸ் மிக அருமையான போதகர். கண்களை மூடி அவரது ஜெபத்தை கேட்டால் போதும், ஆறாய் பெருக்கெடுத்து ஓடிவிடும் கண்ணீர். ஆண்டவர் மீது அப்படியொரு விசுவாசி அவர். இந்த தேசத்தில் கிறுத்துவ மதத்திற்கு கன்வர்ட் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கையில் கணிசமான சதவீதம் இவரது ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள்தான்.The statues are taken from temples in India and crosses ... Lazarus


அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான லாசரஸுக்கும், சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதுமே உண்டு. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா குறித்து வாய்த்துடுக்காக இவர் பேசிட, அதற்காக வகையாய் விமர்சித்துக் கொட்டினர் பக்தர்கள். அதேபோல் ‘தமிழ்நாட்டில் பெரிய பெரிய கோயில்கள் மற்றும் கோபுரங்கள் சாத்தான்களுக்கு அரணாக விளங்குகின்றன.’ என்றார். இது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அதோடு அடங்கினாரா? இல்லை. ‘கும்பகோணத்தில் கிரகிக்க முடியாதபடி சாத்தான்கள் வேரூன்றி இருக்கின்றன’ என்று சொல்லி இந்துக்களை வம்புக்கு இழுத்தார்.The statues are taken from temples in India and crosses ... Lazarus

இப்போது அவர், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு இந்து கோயிலில் கோபுரமெல்லாம் அப்படியே இருக்கிறது. அந்தக் கோயிலில் உள்ளே இருக்கிற சிலையை மட்டும் எடுத்து விட்டு, அதற்கு பதில் சிலுவையை வைத்து சர்ச்சாக மாற்றி ஆராதனை நடக்கிறது. ஒரு அடையாளம் தோன்ற ஆரம்பித்து விட்டது. இனி இந்தியா முழுவதும் அந்த மாதிரி காரியங்கள் நடக்கப்போகிறது’’என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios