Asianet News TamilAsianet News Tamil

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்... சாட்டையை சுழற்றும் அறிவாலயம்... கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்..!

அமைச்சர் கே.என்.நேரு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து இருக்கிறார். அந்த குழு, கட்சி பதவியில் இருந்து துாக்க வேண்டியவர்களின் பட்டியலை தயாரித்து இருக்கிறதாம்.

The shock report given by the intelligence ... The whip that spins the whip ... DMK executives in turmoil ..!
Author
Tamil Nadu, First Published Jan 17, 2022, 11:31 AM IST


வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தவரை, சேலம் திமுக அவருடைய கையில் இருந்தது. சேலம் மாவட்ட தி.மு.க., செயலராக இருந்த, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பிறகு அந்த மாவட்டத்தை மூன்றாக பிரித்து கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. இப்படி மூன்றாக பிரித்ததால், சேலத்தில் கொஷ்டி பூசல் அதிகமாகி விட்டது. அதனால் தான், சட்டசபை தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10ல் தி.மு.க., தோல்வியை தழுவியது. The shock report given by the intelligence ... The whip that spins the whip ... DMK executives in turmoil ..!

கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காஉ, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 10 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. ஓமலூரில் மட்டும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு ஒரு தொகுதியை தவிர மற்ற 10 தொகுதிகளிலும் தோல்வியையே தழுவியது.  எனவே, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த கோஷ்டி பூசலால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் என  அக்கட்சி தலைமைக்கு உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை கொடுத்து இருக்கிறார்கள். இதனால், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை, சேலம் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். The shock report given by the intelligence ... The whip that spins the whip ... DMK executives in turmoil ..!

சேலம் தி.மு.க., நிர்வாகிகளை கண்காணிக்க, அமைச்சர் கே.என்.நேரு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து இருக்கிறார். அந்த குழு, கட்சி பதவியில் இருந்து துாக்க வேண்டியவர்களின் பட்டியலை தயாரித்து இருக்கிறதாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு சேலம் தி.மு.க., சீட்டு கட்டு போல கலைத்து போடப்படும் என உடன்பிறப்புகள் பேசிக்கொள்கிறார்கள். சேலம் மாவட்டத்துக்குட்பட்ட தொகுதியில் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வருகிறது. ஆகையால் கோவையை போல, சேலமும் எங்கள் கோட்டை என மார்தட்டி வருகிறது அதிமுக. ஆகையால் திமுகவை அங்கு வலுவாக்க எந்த வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லை. எனவே அங்கு நடவடிக்கை பாய்வது உறுதி என்கிறார்கள். இதனால் சேலம் மாவட்ட உடன்பிறப்புகள் யார் பதவி பறிக்கப்படுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios