சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.நகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. மேலும் முதல்வரே நான் அடித்துவிடுவேன் என பயந்து 100 போலீஸாரை அழைத்து வருகிறார் என்றும் கூவத்தூரில் நான் இல்லாமல் அரசாங்கம் உருவாகியிருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதைத் தொடர்ந்து தான் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் இனி இது போல் பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். 

பொதுவாகவே  அரசியல் கட்சி தலைவர்கள்  கைது செய்யப்பட்டால்  தொண்டர்கள் காவல் நிலையத்துக்கு சென்று தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க என கோஷமிடுவர், ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஆனால்  தலைவர் கருணாஸ் கைதானதும் அவரது ஆட்கள் தப்பி   ஓடியுள்ளனர். ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு இந்த நிலைமையா என விசாரித்ததில் தி.நகர் ஏரியாக்களில் வட்டி பிசினஸ் செய்துள்ளார். அதிமுக ஆதரவு MLA என்ற காரணத்தை வைத்துக் கொண்டு ஓவராக கருணாசின் ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டிருந்தார்களாம்,  இதனால், அந்த பகுதி முக்கிய போலிசுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளதாம். 

இந்த சூழலில் தான் கருணாஸ் வசமாக சிக்கியதால் சரியான சமயம் பார்த்து காத்திருந்த போலீசார், முதல்வரையும் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள்  போட்டு கைது செய்யும் முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது.

இதற்கு முன்னதாக முதல்வர் எடப்படியாரின் சமூகத்தை சேர்த்த பெரும் புள்ளிகள் சிலர் கருணாஸை கைது செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் எடப்பாடியோ இப்போ இருக்கும் சூழலில் கருணாஸை கைது செய்தால் அவர் ஜாதியினர் மத்தியில் ஹீரோவாக தன்னை காட்டிக் கொள்வார் என்பதால் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால், போலீசை தொடர்ந்து வட்டி பிசினஸ் காரணத்திற்காக மோதலில் ஈடுபட்டதோடு, மோசமாக பேசி வந்துள்ளார். இதுதான் சமயமென போலிசாரும் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்துள்ளார்களாம்.