ஈழப்போரில் விடுதலைப்புலிகளை வீழ்த்த தி.மு.க – காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு தான் இலங்கைக்கு உதவிகள் செய்ததாக பேசப்பட்டு வரும் நிலையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

ஈழப்போரில் விடுதலைப்புலிகளை வீழ்த்த தி.மு.க – காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு தான் இலங்கைக்கு உதவிகள் செய்ததாக பேசப்பட்டு வரும் நிலையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போதே இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

ஈழப்போரில் தமிழர்களுக்கு மத்திய காங்கிரஸ் – தி.மு.க அரசு செய்த துரோகத்தை கண்டித்து அ.தி.மு.க போராட்டம் அறிவித்துள்ளது. அதாவது ஈழப்போரின் போது இந்திய அரசு செய்த உதவியால் தான் விடுதலைப்புலிகளை வீழ்த்த முடிந்ததாக அண்மையில் ராஜபக்சே கூறியதாகவும், எனவே அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்து தி.மு.க – காங்கிரசை கண்டித்து தாங்கள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அ.தி.மு.க அறிவித்துள்ளது.



தேனியில் ஓ.பி.எஸ் தலைமையிலும், சேலத்தில் எடப்படி தலைமையிலும் ஆர்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளியிட்ட தகவல் தற்போது வெளியாகி அ.தி.மு.கவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில இரங்கல் கூட்டம் நடைபெற்றது.



மேலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க வாஜ்பாய் ஏற்பாடு செய்ததாகவும் விக்ரமசிங்கே கூறியுள்ளார். மேலும் அந்த கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் மிகவும் பலம் பெற்று இருந்ததாகவும், கடற்புலிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கடுமையான நடவடிக்கை எடுக்க வாஜ்பாய் உதவிகள் செய்ததாகவும், வாஜ்பாய் இல்லை என்றால் கடற்புலிகளை அழித்திருக்க முடியாது என்றும் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.

தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரசுக்கு எதிராக போராடும் அ.தி.மு.க பா.ஜ.கவிற்கு எதிராகவும் போராடுமா என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.