Asianet News TamilAsianet News Tamil

தலைவி படத்தில் அந்தக் காட்சியை நீக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பிடிவாதம்..!

தலைவி படத்திற்கு அதிமுக-வினரும் மக்களும் ஆதரவு தருவார்கள். எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதித்தது போல சில காட்சிகள் இருக்கின்றன. 

The scene in the movie Talaivi should be removed ... Former Minister Jayakumar is stubborn
Author
Tamil Nadu, First Published Sep 10, 2021, 3:52 PM IST

தலைவி படத்தில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன. தலைவர் எம்ஜிஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியாது. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். The scene in the movie Talaivi should be removed ... Former Minister Jayakumar is stubborn

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படம் பல்வேறு சிக்கல்களை தாண்டி இன்று வெளியாகியுள்ளது.The scene in the movie Talaivi should be removed ... Former Minister Jayakumar is stubborn

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ” தலைவி படத்திற்கு அதிமுக-வினரும் மக்களும் ஆதரவு தருவார்கள். எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதித்தது போல சில காட்சிகள் இருக்கின்றன. அதனை இயக்குநர் நீக்கிட வேண்டும். தலைவி படத்தில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன. தலைவர் எம்ஜிஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியாது. அக்காட்சிகளை நீக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios