நடிகர் கார்த்தி குடும்பத்த பற்றி தெரியுமுல்ல. அவருக்கும், அவரது அண்ணனுக்கும் இருக்கும் செல்வாக்கு தெரியுமுல்ல...

முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சமீபத்தில் இந்தப்படத்தின் சூட்டிங் நடந்த போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொண்டரணி செயலாளர் ஒருவர் தன் ஆதரவாளர்களோடு அங்கே சென்று''எங்க ஏரியாவில்'சூட்டிங்' நடக்கிறது. 15 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு பட ஷூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள் என தடாலடியாக கேட்டுள்ளார். 

அதற்கு இயக்குனர் தரப்பில், 'சூட்டிங் நடத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி விட்டோம். ’’நடிகர் கார்த்தி குடும்பத்த பற்றி தெரியுமுல்ல. அவருக்கும், அவரது அண்ணனுக்கும் இருக்கும் செல்வாக்கு தெரியுமுல்ல...' என சொல்லி இருக்கிறார். ''கோபமான ஆளுங்கட்சி பிரமுகர், 'இப்போ போறேன்... நீங்களே வந்து பணத்தை கொடுப்பீங்க பாருங்க' என சவால் விட்டுச் சென்று இருக்கிறார்.