அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் ஆட்சி தொடர்ந்து நீடிக்காது என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைந்தாலும் ஆட்சி தொடர்ந்து நீடிக்காது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று இணைந்ததாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. 

ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அதிமுக அணிகள் இணைந்தாலும் ஆட்சி தொடர்ந்து நீடிக்காது என்று கூறினார். அணிகள் இணைப்பால் தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கப்போவதில்லை என்றும் கனிமொழி கூறியுள்ளார்.