The Prime Minister Modi who brought the GST is going to be ruined

தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம் 20 கோடியாக இருந்தாலும் அதை கொடுக்க தயங்குவதில்லை தயாரிப்பாளர்கள். ஆனால் அதே சமயத்தில் ஹீரோயின்களுக்கு அதிக சம்பளம் என்றால் அது பெரிய பிரச்சனையாக பார்க்கிறார்கள்

அதிருப்தி
தயாரிப்பாளர்கள்.ஹீரோயின்களுக்கு சம்பளம் அதிக அளவில் உயர்ந்து வருவதால் தயாரிப்பாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

தயாரிப்பாளர் கே.ராஜன்

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் கே.ராஜன். இவர் சிவா மனசுல ப்யூஷா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது
இன்று நாளிதழில் ஒரு செய்தியை படித்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

தெருக்கோடி
நயன்தாராவுக்கு ரூ.5கோடி, ஹன்சிகாவிற்கு ரூ. 3கோடி, தமன்னாவுக்கு ரூ. 1கோடி சினிமா தெருக்கோடிக்கு போச்சு.இன்றைய சினிமா நாசமா போச்சு. படம் எடுத்த தயாரிப்பாளர் காணாமல் போனார்கள்.

ஜிஎஸ்டி

இந்த ஜிஎஸ்டி போட்ட புண்ணியவான் நாசமா போகணும்.இப்படி நடிகைகள் சம்பள கணக்கை போடும் நாளிதழ்கள் தயாரிப்பாளரின் கதியை பற்றி போடுமா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் பிரதமரை தாக்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.