Asianet News TamilAsianet News Tamil

சிக்க வைத்த ஜெயலலிதா மரண விவகாரம்... பதறும் சசிகலா குடும்பம்... பறிபோகிறதா கொடநாடு எஸ்டேட்..?

ஜெயலலிதா மரண விசாரணையில் கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட விவகாரத்தையும் இழுத்துவிட்டு சசிகலா குடும்பத்திற்கு அதிர்ச்சி வெடியை பற்ற வைத்திருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். 

The plucked Kodanad estate
Author
Tamil Nadu, First Published Dec 20, 2018, 3:23 PM IST

ஜெயலலிதா மரண விசாரணையில் கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட விவகாரத்தையும் இழுத்துவிட்டு சசிகலா குடும்பத்திற்கு அதிர்ச்சி வெடியை பற்ற வைத்திருக்கிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். 

ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து விசாரணையில் கொடநாடு எஸ்டேட் விவகாரமும் இழுக்கப்படும் என்பதை சசிகலா குடும்பமே எதிர்பார்த்திருக்காது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், முக்கிய துருப்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கோடநாடு தேயிலை எஸ்டேட். இதன் முன்னாள் உரிமையாளர், கிரேக் ஜோன்ஸ்; அவரது மகன், பீட்டர் கிரேக் ஜோன்ஸ். கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.The plucked Kodanad estate

ஜெயலலிதா மறைந்த பிறகு தனது தந்தையிடமிருந்து, கோடநாடு எஸ்டேட்டை மிரட்டி வாங்கியதாக, அதிரடி காட்டினார் பீட்டர் கிரேக் ஜோன்ஸ். இந்நிலையில், நேற்று அவர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், இது மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்த வழக்கு. இப்போது கொடுநாடு பற்றி விசாரிக்க வேண்டிய அவசிமென்ன? எனக் கேள்வி எழுப்பினார். 

விசாரணை நடத்துவதில் அவசியம் இருக்கிறது எனக் கூற்ய ஆறுமுக சாமி கிரேக் ஜோனிடம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை மேற்கொண்டார். அப்போது, கொடநாடு எஸ்டேட் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றி சசிகலா வாங்கினார் என்பதை புட்டுப்புட்டு வைத்து இருக்கிறார். இதனால், சசிகலா தரப்பு அதிர்ச்சியடந்துள்ளது. The plucked Kodanad estate

ஜோன்ஸ் தரப்பு கொடுத்த தகவல் இதுதான்.. ’’1990-களில் நீலகிரி மாவட்டத்தில் சொத்து வாங்குவது தொடர்பாக பல்வேறு இடங்களை ஜெயலலிதாவும், சசியும் பார்வையிட்டார்கள். கடைசியில் அவர்கள் திருப்தியுற்ற இடம் கொடநாடு எஸ்டேட். 1800-களில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்டேட், ஒவ்வொரு கையாக மாறி விற்கப்பட்டு, எங்களது குடும்ப சொத்தாக மாறியது. கடந்த 1975-ம் ஆண்டு 33 லட்சம் ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட்டை வாங்கினோம். அதில் 50 ஏக்கரை, சில காரணங்களால் விற்றோம். ஆனாலும், 900 ஏக்கர் எஸ்டேட் கைவசம் இருந்தது. ஆனால், கடன் காரணமாக எஸ்டேட்டை விற்க முடிவு செய்தோம். இதையறிந்து, சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தினர் எங்களை அணுகினர். ஆனால், எஸ்டேட்டை அவர்களுக்கு விற்க மனமில்லை என்று கூறினோம். The plucked Kodanad estate

அந்த எஸ்டேட்டை வாங்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு ஜெ.,சசி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி. தொடர் மிரட்டல்கள்... 150-க்கும் அதிகமான ரவுடிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். எஸ்டேட்டை அவர்களுக்கு விற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு எங்களை தள்ளுவதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள்.

மிகமிகக்குறைவாக ஏழு கோடி ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட் விற்கப்பட்டது. இந்த விற்பனையில் அதிமுக விசுவாசியும் தொழிலதிபருமான ராஜரத்தினம் மற்றும் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்பிருந்தது. முறையான பத்திரப்பதிவு நடக்கவில்லை. நாங்கள் எந்த பதிவாளர் அலுவலகத்திற்கும் செல்லவில்லை. சென்னையில் உள்ள ராமச்சந்திர உடையாரின் வீட்டில் வைத்தே சொத்து பரிமாற்றம் நடைபெற்றது. அதுவும் பினாமி முறையிலேயே கொடநாடு எஸ்டேட் விற்கப்பட்டது. உடையாருக்கு எஸ்டேட்டை மாற்றி கொடுக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு வந்தேன்.

The plucked Kodanad estate

ஜெ.வின் பினாமியாக உடையார் செயல்பட்டார். அடுத்த நாளிலேயே என்னிடம் இருந்து கொடநாடு எஸ்டேட் பிடுங்கப்பட்டது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜெ.கும்பலால் கொடநாடு என்னிடமிருந்து திருடப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டை திரும்ப பெறவேண்டுமேன்பதே என்னுடைய ஒரே விருப்பம். அதற்காக சசிகலா குடும்பத்திற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இழப்பீடை அளித்து விடுகிறேன்’’ எனத் தெரிவித்து இருக்கிறார் ஜோன்ஸ்.

 The plucked Kodanad estate

 அதுமட்டுமல்லாது கொடநாடு விற்க்ப்பட்டது தொடர்பான சில ஆவணங்களின் நகல்களையும் கிரேக் ஜோன்ஸ் ஆணையத்தில் கொடுத்துள்ளார். இதனையடுத்து சட்டரீதியாக கொடநாடு எஸ்டேட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் கிரேக் ஜோன்ஸ் எடுக்க உள்ளதாகக் கூறுகிறார். ஏற்கெனவே அரசியல் ரீதியாகவும், சட்டச்சிக்கல்களில் மாட்டித் தவிக்கும் சசிகலா குடும்பத்திற்கு இந்த விவகாரம் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios