Asianet News TamilAsianet News Tamil

ஏழு தமிழர் விடுதலையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்... குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி கடிதம்.

பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கோரி வருகின்றன. ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும்  தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

The people of Tamil Nadu are waiting for the release of seven Tamils ... Madurai MP's letter to the President of the Republic.
Author
Chennai, First Published Nov 5, 2020, 11:06 AM IST

எழுவர் விடுதலை குறித்து  குடியரசுத்தலைவருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  வணக்கத்திற்குரிய குடியரசு தலைவர் அவர்களுக்கு,

முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும், அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்யவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.இந்திய சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

The people of Tamil Nadu are waiting for the release of seven Tamils ... Madurai MP's letter to the President of the Republic.

அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்தும் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கோரி வருகின்றன. ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும்  தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

The people of Tamil Nadu are waiting for the release of seven Tamils ... Madurai MP's letter to the President of the Republic.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் இவ் விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அந்த எழுவரும் மிக மிக அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும்  என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Follow Us:
Download App:
  • android
  • ios