Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி போடும் கட்சியே ஆட்சியமைக்கும்... பொன். ராதாகிருஷ்ணன் அதீத நம்பிக்கை..!

தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

The party that will form an alliance with the BJP in Tamil Nadu will rule ... Pon. Radhakrishnan is overconfident
Author
Tamil Nadu, First Published Aug 25, 2020, 5:42 PM IST

தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் மாநில பாஜக தலைவர் முருகன் உரையாற்றினார்.The party that will form an alliance with the BJP in Tamil Nadu will rule ... Pon. Radhakrishnan is overconfident

கூட்டத்துக்குபின் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘’தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும். தற்போது அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும். 

திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று அக்கட்சி பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி சொல்லியிருக்கிறார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்தாகிவிட்டது. தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரை வந்தால் சிறந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும்”எனத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios