Asianet News TamilAsianet News Tamil

நாட்டை அழிக்கும் கட்சிகள் திமுக, காங்கிரஸ்... தூத்துக்குடியில் துள்ளிய பொன்னார்..!

குடியுரிமைச் சட்டத்தை, கலவரம் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக நடத்துகிற போராட்டம் சரியில்லாத ஒன்று என 60 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரச்னைகளின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எறியும் வழக்கத்தை தமிழகத்தில் திமுகவும், அங்கே மம்தாவும் கையாண்டு வருகின்றனர்

The parties that destroy the country are the DMK, Congress...pon radhakrishnan
Author
Thoothukudi, First Published Dec 25, 2019, 11:24 AM IST

அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எறியும் வழக்கத்தை தமிழகத்தில் திமுகவும், அங்கே மம்தாவும் கையாண்டு வருகின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்;- ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றி பெற்று உள்ளது. இருந்தாலும் பாஜக அதிகப்படியான வாக்குகளை பெற்று உள்ளது. கூட்டணி சரியாக அமையவில்லை என்றால் சறுக்கல் ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பெரிய வாக்கு சதவீதத்தை கொடுத்து உள்ளனர். மாநிலங்களில் சில இடங்களில் சில சறுக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் பாஜக ஈடுபடும் என்றார். 

The parties that destroy the country are the DMK, Congress...pon radhakrishnan

மேலும், மக்களை திசை திருப்பி கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடி பழக்கப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள், குடியுரிமை சட்ட திருத்தத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, திமுக உள்ளிட்டவர்கள் இதுபோன்ற வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும். அதுவே அவர்களுக்கு நல்லது. இந்த போராட்டம் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இந்த நாட்டை அழிக்க பார்க்கின்றன.

The parties that destroy the country are the DMK, Congress...pon radhakrishnan

குடியுரிமைச் சட்டத்தை, கலவரம் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக நடத்துகிற போராட்டம் சரியில்லாத ஒன்று என 60 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரச்னைகளின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எறியும் வழக்கத்தை தமிழகத்தில் திமுகவும், அங்கே மம்தாவும் கையாண்டு வருகின்றனர் என பொன்னார் குற்றம்சாட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios