மத்தியில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்று பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தோற்று ஒரு நாள் கூட ஆகவில்லை. அந்த கவலையை மறந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராசா புன்னகை தவழ ஸ்வீட் கொடுத்து கொண்டாடி வருகிறார்.

 

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார். கார்த்திக் சிதம்பரம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்றார். ஹெச்.ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். 

பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஹெச்.ராஜா வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சராகும் வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அவர் தோல்வியை தழுவி விட்டார். ஆனாலும் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதால் அந்தக்கவலையை மறந்து மோடி பிரதமராவதை ஸ்வீட் கொடுத்து கொண்டாடி வருகிறார் ஹெச்.ராஜா. தொண்டர்களோடு வெடிவெடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.