Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்பாகி... வசூல் செய்து தாஜா செய்யும் அதிகாரிகள்..!

கொள்ளைதான் முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டு சென்னை பெருநகராட்சியில் பார்க் டிபார்ட்மெண்டில் நிர்வாக பொறியாளராக இருக்கும் புவனேஷ்வரன்.

The officer who collects and makes fresh ... Day robbery in the park ..!
Author
Tamil Nadu, First Published May 21, 2021, 12:27 PM IST

தேர்தல் ரிசல்டுக்கு முதல் நாள் வரை அதிமுகவில் இருந்தவர்கள் திமுகவின் வெற்றியை அறிந்தவுடன் பலர் அப்படியே ஜாகையை மாற்றி விட்டார்கள். அப்படி கொள்கை முக்கியமில்லை. கொள்ளைதான் முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டு சென்னை பெருநகராட்சியில் பார்க் டிபார்ட்மெண்டில் நிர்வாக பொறியாளராக இருக்கும் புவனேஷ்வரன். மாநகராட்சி அதிமுக தொழிற்சங்கத்தில் இருந்தவர், திடீரென மாநகராட்சி திமுக தொழிற்சங்கத்தில் ஒட்டிக் கொண்டாதாக கூறுகிறார்கள். The officer who collects and makes fresh ... Day robbery in the park ..!

இதுகுறித்து மாநகராட்சியின் அப்பகுதி அதிகாரிகள் கூறுகையில், ‘’மாநகராட்சியில் பார்க் டிபார்ட்மெண்டில் உள்ள 1 வது மண்டலம் முதல் 8 வது மண்டலங்களான மாதவரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாக பொறியாளராக இருந்து வருகிறார் புவனேஷ்வரன். பார்க் பகுதிக்கு அவர் இடம்மாறி வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ரூ.200 கோடி அளவுக்கு வேலை எடுத்துக் கொடுத்துள்ளார். வடசென்னை பகுதியில் இந்த மண்டலங்கள் இருப்பதால் அதிகாரிகள் இந்தப்பகுதிகளில் தலைகாட்டுவதில்லை. ஆகையால் புவனேஷ்வரன் ஏகபோகமாக செல்வாக்குடன் இருந்து வருகிறார்.The officer who collects and makes fresh ... Day robbery in the park ..!

அடிக்கல் நாட்டுவிழா, பூஜை என ஒவ்வொரு வேலை தொடங்கும்போதும் தனியாக ரூ.20 ஆயிரம் பெற்றுக்கொள்வார். அதுபோக, கமிஷனர், மினிஸ்டர் பேரைச் சொல்லியும் தனியாக வசூலித்து இவரே வைத்துக் கொள்வார். இதுவரை அவரது பணி அனுபவத்தில்1 ஆண்டுக்கு மேல் எங்கும் ஓரிடத்தில் வேலை செய்ததில்லை. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் மோதல், ஊழல் குற்றச்சாட்டு என ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு பணி மாற்றம் செய்யப்படுவார். இவரது சீனியாரிட்டிப்படி சீனியர் பொறியாளராக பதவி உயர்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால், நிர்வாக பொறியாளராகவே இன்னும் இருந்து வருகிறார். காரணம் இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள், ஃபனிஸ்மெண்ட், சார்ஜ், மெமோ இருக்கிறது. ஆகையால் பதவி உயர்வு பெற இயலவில்லை. இன்னும் இவரது பதவிகாலம் 3 ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. The officer who collects and makes fresh ... Day robbery in the park ..!

கடைசி காலத்தில் பெருமளவு சம்பாதிக்க வேண்டும் என திட்டமிட்ட புவனேஷ்குமார், அதிமுக தொழிற்சங்கத்தில் இருந்து அப்படியே திமுக தொழிற்சங்கத்திற்கு தாவி விட்டார். அங்கு சென்ற பிறகு டெண்டர்களிடம் பணம் வசூலில் கடுமையாக நடந்து கொள்கிறார். இங்குள்ள ஊழியர்களையும், அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வற்புறுத்தி திமுக அனுதாபிகளான உயரதிகாரிகளை தூண்டி விடுகிறார். அதாவது பரவாயில்லை. உயரதிகாரிகள், திமுக எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை சொல்லி வசூல் வேட்டையாடி வருகிறார்’’என அடுக்கடுக்காண புகார்களை கூறுகிறனர் மாநகராட்சி அதிகாரிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios