Asianet News TamilAsianet News Tamil

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை பெற திமுக எடுத்த அடுத்த அதிரடி... நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரபர கடிதம்.!

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்று திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
 

The next step taken by the DMK to get the Chengalpattu vaccine company... a sensational letter to the Parliamentary Standing Committee.!
Author
Chennai, First Published Jun 2, 2021, 8:30 PM IST

செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிப்பதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The next step taken by the DMK to get the Chengalpattu vaccine company... a sensational letter to the Parliamentary Standing Committee.!
அந்தக் கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்று நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. பல மாதங்களாக நடைபெற்ற ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சில நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைக் கண்டறிந்துள்ளன. மக்கள்தொகை மிகவும் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாட்டில் அதிகளவில் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

The next step taken by the DMK to get the Chengalpattu vaccine company... a sensational letter to the Parliamentary Standing Committee.!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். அதன்மூலம், அந்த ஆலையை இயக்க தொழில்நுட்பத்தைப் பெற்று, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற தென்மாநிலங்களுக்குமான தடுப்பூசி மருந்துகளையும் உற்பத்தி செய்ய முடியும். இதுகுறித்து, மத்திய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். எனவே, இது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்” என்று கடிதத்தில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios