Asianet News TamilAsianet News Tamil

உஷார்...! அடுத்த அதிரடிக்கு அச்சாரம் போடும் தமிழக அரசு...! இதையும் விலை உயர்த்த திட்டமாம்?

The next planTamil Nadu Government
The next planTamil Nadu Government
Author
First Published Jan 24, 2018, 2:20 PM IST


தண்ணீர் வரி 2008ல் இருந்து ஏற்றவில்லை; வீட்டு வரி 2011ல் இருந்து ஏற்றவில்லை, 7 ஆண்டுக்கு பின் கட்டணம் உயர்வு என அரசு கூறுவது மற்ற வரியினையும் உயர்த்த உள்ளதற்கான அச்சாரம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

The next planTamil Nadu Government

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், படுக்கை வசதியுடன் கொண்ட 2000 புது பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

The next planTamil Nadu Government

டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பேருந்தின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் எனவும் விளக்கம் அளித்தது. 

இதனிடையே பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் நடைபெறும் பொதுமக்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளியுங்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து போக்குவரத்து துறையை சீர்செய்ய வேண்டும் எனவும் வருமானம் உள்ள வழித்தடங்களில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

The next planTamil Nadu Government

மேலும் பேருந்து கட்டண உயர்வுக்கு மத்தியை ஆளும் பாஜகவும் கண்டனம் தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், இன்று செய்தியாளரகளை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தண்ணீர் வரி 2008ல் இருந்து ஏற்றவில்லை; வீட்டு வரி 2011ல் இருந்து ஏற்றவில்லை, 7 ஆண்டுக்கு பின் கட்டணம் உயர்வு என அரசு கூறுவது மற்ற வரியினையும் உயர்த்த உள்ளதற்கான அச்சாரம் என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios