அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து குறித்து தமிழக அரசின் ஆலோசனையை பெறாமல் துணை வேந்தர் சூரப்பா தன்னிசையாக கடிதம் எழுதினார். இது அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டன் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

சூரப்பா நடந்துக்கொண்ட விதம் தொடர்பாக அமைச்சர் சி.வி. சண்முகம் பேசும்.. “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமானது. சூரப்பா நடந்துக்கொண்ட விதம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாதகம் விளைவிக்கிற செயலை ஏற்க முடியாது” என்றார்.முன்னதாக சூரப்பா எழுதிய கடிதத்திற்கு தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.